‘டோன்ட் கோ பேக் மோடி’ புதிதாக டிரெண்டான ஹேஸ்டேக்

0
57

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவர்கள் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பிற்கு பிறகு ‘டோன்ட் கோ பேக்’ என்ற ஹேஸ்டேக் புதிதாக டிரெண்டாகி உள்ளது இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் மோடி இருவரும் சந்தித்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு இன்று (அக்.12) மதியம் நிறைவடைந்தது.

தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய டிரெண்ட் இந்நிலையில், பிரதமர் மோடி சென்னை வரும் போதெல்லாம் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் இந்த முறை அதற்குப் பதிலாக #TNWelcomeModi டிரெண்ட் செய்யப்பட்டது. மோடி தமிழகம் வரும்போதெல்லாம் இந்த டிரெண்டிங் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இம்முறை சீன அதிபர், மோடி சந்திப்பு நிகழ்ச்சிக்கு பிறகு மோடி திரும்பிச் செல்லும் நேரத்தில், #DontGoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி உள்ளது. நீண்ட நேரமாக டிரெண்டில் இருந்த இந்த ஹேஸ்டேக்கில் மோடியை பலரும் புகழ்ந்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து சீன அதிபரை வரவேற்றது, மாமல்லபுரம் கடற்கரையிலிருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியது பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது. இதனால் அவருடை பயணம் தொடர்பான படங்களை பதிவிட்டு பெரும்பாலான மக்கள் மோடியை வாழ்த்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here