முன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதனுக்கு என்.ஆர்.காங். புதிய பொறுப்பு

0
302

லாஸ்பேட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதனுக்கு தேர்தல் தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் புதிய பொறுப்பை வழங்கியுள்ளது. இது தொடர்பாக என்.ஆர்.காங். பொதுச் செயலாளர் பாலன் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர். நாராயணசாமிக்கு ஆதரவாக என்.ஆர். காங்கிரசார் மற்றும் கூட்டணி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டாக்டர் நாராயணசாமிக்கு ஆதரவாக நடைபெறும் பிரசாரத்திற்கு முன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதன் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களின் பிரசாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கு வைத்தியநாதன் ஒத்துழைப்பு வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here