மாற்றுத் திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள் வழங்கப்பட்டது.

0
480

புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனமும் (NIEPMD)  இணைந்து MPLAD (Rajya Sabha) என்ற திட்டத்தின் கீழ் இலவச முடநீக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான பயனாளிகளை கடந்த ஆண்டு தேர்வு செய்தது, இத்திட்டத்திற்காக மாவட்ட கிராம வளர்ச்சி முகமை முதல் தவனையாக ரூ.10 லட்சத்தை மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் வழங்கியது. இந்த நிதியின் மூலம் சுமார் 170 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய்.10 லட்சம் மதிப்புள்ள சக்கர நாற்காலி, மூன்று சக்கர மிதிவண்டி, மற்றும் முடநீக்கு உபகரணங்கள் ஆகியவற்றை NIEPMD  நிறுவனம் வாங்கி சமூக நலத்துறைக்கு அனுப்பியது, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, சமூகநலதுறை அமைச்சர் கந்தசாமி, மாநிலங்களவை  உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு உபகரணங்களை வழங்கினார்கள். உடன் மாவட்ட கிராம வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரவி பிரகாஷ், டாக்டர் அமர்நாத், துறை இயக்குனர் சாரங்கப்பாணி, துணை இயக்குனர் திருமதி.சரோஜினி, உதவி இயக்குனர் திருமதி.ரத்னா, கண்காணிப்பாளர் அல்லிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here