பாரதீய மஸ்தூர் சங்கம் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. – பிஎம்எஸ் செயலாளர் சிவஞானம்

0
313

பாரதீய மஸ்தூர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலக்குழு செயலாளர் சிவஞானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
1989 ஆம் ஆண்டு முதல்¢ பாரத்தின் முதன்மை சங்கமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு ஐ.நாவின் ஐஎல்ஓ&வில் இந்திய நாட்டு தொழிலாளர்களின் ஒரே பிரதிநிதியாக செயலாற்றி வருகிறது.
தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் மிகச்சிறப்பாக செயலாற்றி வருகிறது. 2019 பொதுத் தேர்தல் காரணமாக சில அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளன. இன்றிய மத்திய அரசின் கொள்கைளை எதிர்த்து வேலை நிறுத்தம் அறிவித்துள்ள இந்த தொழிற்சங்கங்களுக்கு தலைமை தாங்குவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், நாட்டை அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றியவர்கள்.
பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் பாரத பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், கடந்த 19&07&2015 அன்று இந்திய வரலாற்றிலேயே பிரதமர் அவர்கள் தனது இல்லத்திற்கே தொழிற்சங்க தலைவர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். மத்திய சங்கங்களின் கோரிக்கைகளில் 8&ஐ நிறைவேற்றவும், 4 கோரிக்கைகளை பேசி தீர்க்கவும், ஐந்து அமைச்சர்களை கொண்ட குழுவை அமைத்தார். மேலும் பிஎம்எஸ் நிறைவேற்றி, தற்போது நடைமுறையில் உள்ள 45 நாட்களில் தொழிற்சங்கங்களை பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மறைத்து அதையே 2019 வேலை நிறுத்தத்தில் கோரிக்கையாக வைத்திருப்பது தொழிலாளர்களை ஏமாற்றும் நயவஞ்சக செயலாகும்.
வேலை நிறுத்தம் என்பது இறுதிகட்ட ஆயுதமே அப்படிபட்ட வேலை நிறுத்தம் தொழிலாளர் நலனுக்காக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சுய நலனுக்காக இருக்கக் கூடாது. எனவே, அரசியல் காரணங்களுக்காக 2019 ஜனவரி 8,9 தேதிகளில் நடைபெறும், வேலை நிறுத்தத்தில் பாரதீயமஸ்தூர் சங்கம் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கிறது. மேலும், உண்மைகளை ஆராய்ந்து தொழிலாளர்களும் பொது மக்களும் இந்த வேலை நிறுத்தத்தை புறக்கணிக்க வேண்டுமென பிஎம்எஸ் கேட்டுக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here