புதுவை அரசு ஊழியர் ராமலிங்கம் பணி ஓய்வு பெறும் நாளில் உண்ணாவிரதம்

0
641

புதுவை கூட்டுறவுத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுபவர் ராமலிங்கம். கடந்த 25 ஆண்டுகளாக கூட்டுறவு அதிகாரியாக பணியாற்றி வரும் இவர் அரசு ஊழியர் சம்மேளனத்தில் உறுப்பினராக உள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் அப்போதைய கூட்டுறவு பதிவாளரின் சில தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து குறிப்பிட்ட பதிவாளர் ராமலிங்கம் மீது விஜிலென்சில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்த விவரம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ராமலிங்கத்திற்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் விஜிலென்சில் தன்னை பற்றிய புகார் ஏதாவது வந்துள்ளதா என கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் எந்த புகாரும் இல்லை என தெரிவித்துள்£னர். இதனிடையே இன்று அவர் ஓய்வு பெறும் நிலையில் கடந்த 28&ம் தேதி இவருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராமலிங்கம் தான் பணி ஓய்வு பெறும் இந்நாளில் தட்டாஞ்சாவடி வி.வி.பி நகரில் உய்ள கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தினை நடத்தினார். அவருக்கு ஆதரவாக அரசு ஊழியர் சம்மேளனத்தினரும், கூட்டுறவு பதிவாளர் ஊழியர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து ராமலிங்கம் கூறியதாவது. கூட்டுறவு துறையில் நான் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்ள்ய்ளேன், அரசு ஊழியர் சம்மேளன உறுப்பினரான நான் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய கூட்டுறவு பதிவாளர் செய்த தவற்றை சுட்டிக்காட்டினேன். அதற்கு பழிவாங்கும் நோக்குடன் இப்போது அதற்கான விளக்கத்தை கேட்டுள்ளனர். இது முற்றிலும் என்னை பழிவாங்கும் நோக்குடன் செய்யப்படுவதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here