லாஸ்பேட்டை தொகுதி, பெத்துச்செட்டிப்பேட்டை கொள்ளிமேடு மைதானம் சீரமைக்கப்படுமா?

0
641

லாஸ்பேட்டை பெத்துச் செட்டிப்பேட்டையில் பின்புறம் அமைந்துள்ள இந்த கொள்ளிமேடு மைதானம் வள்ளலார் நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், சாந்தி நகர் விரிவாக்கத்திற்கு செல்பவர்கள் பயன்படுத்தும் சாலையாக கவும் இந்த கொள்ளிமேடு மைதானம் இருந்து வருகிறது.

இந்த மைதானத்தில் மின் விளக்குகள் இல்லாததால் சமீபகாலமாக இரவு நேரங்களில் திறந்த வெளி பாராக மாறி வருகிறது. இதனால், மாணவர்கள் டியூஷன் முடிந்து இரவு நேரங்களில் இந்த வழியாகத்தான் வீட்டு போக வேண்டும். ஆகையால், இரவு நேரங்களில் பாதசாரிகள் இந்த வழியை கடக்க முடியாத சூழ்நிலையாக மாறி வருகிறது.

மேலும், இந்த மைதானத்தை அரசு கையகப்படுத்தி சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றிள்ளது. ஆனால், அரசாங்கம் இது வரை எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை.

பொதுமக்களுக்கு ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்படும் முன் சம்மந்தபட்ட அரசுதுறை நடவடிக்கை எடுக்குமா என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here