Home மற்றவை ஆன்மீகம் ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுவது ஏன்?

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுவது ஏன்?

0
51

தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் இது. பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். அதனால்தான் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிக்கிழமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும்.

‘ஆடி செவ்வாய் தேடிக் குளி” என்பது பழமொழி. அதாவது ஆடிமாத செவ்வாய்கிழமையன்று விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும், நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்திக்கூர்மையுடன் கூடிய குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்” என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

உலகில் பிறந்த அனைவருமே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், மகிழ்ச்சி, இன்பம் போன்றவை தற்காலிகமானவை.
மனித வாழ்க்கையே நேற்று இருந்தவன் இன்று இல்லை என்பதாகத்தான் நிலையற்றதாக இருக்கிறது.

நிலையான வாழ்வும், நிலையான மகிழ்ச்சியும் பெற நாம் என்ன செய்யலாம்? என்று சிந்தித்த யோகி பதஞ்சலி தனது அறிவையும், அனுபவத்தையும் அடிப்படையாக வைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பதஞ்சலி யோக ரகசியங்கள் என்னும் புத்தகத்தை நமக்கு தந்துள்ளார்.

ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது! ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. இத்தகைய விசேஷ நாட்களில் விரதமிருந்து அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது.

NO COMMENTS