ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு – மத்திய அரசு அறிவித்தது.

0
532

ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. மேலும் தேர்வு முறையிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக் கான நுழைவுத்தேர்வுகளை ‘சி.பி.எஸ்.இ.’ என்னும் மத்திய கல்வி வாரியம் நடத்தி வந்தது. அதிரடி மாற்றங்கள் குறிப்பாக, மருத்துவ, பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான ‘நீட்’ தேர்வு, ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), என்.ஐ.டி. (தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), ஐ.ஐ.ஐ.டி. (இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கான ‘ஜே.இ.இ. மெயின்’ தேர்வுகளை ‘சி.பி.எஸ்.இ.’ நடத்தி வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here