இணையதளம் மூலம் சான்றிதழ்கள்

0
1382

இணையதளம் மூலமாக சாதி, குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்கும் திட்டம், வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இதுகுறித்து, சிறப்பு செயலரும் (வருவாய்), கலெக்டருமான அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் முக்கிய சேவைகளை இணையம் வழியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, தாசில்தார், துணை தாசில்தார் அலுவலகங்களில் வழங்கப்படும் குடியிருப்பு, குடியுரிமை, சாதி, வருமான சான்றிதழ்கள் ‘மின் மாவட்டம்’ திட்டத்தில் வழங்கப்பட உள்ளது.

இந்த சேவையை https://edistrict.py.gov.in என்ற இணையதளம் வாயிலாக பெறலாம். பொதுமக்கள் சான்றிதழ்களை எளிதாக பெறும் நோக்கத்தில், நேர விரயமின்றி ஆன்லைன் மூலமாக சான்றிதழ்களை பெறுவதற்கும், போலி சான்றிதழ்களை தடுப்பதற்கும் புதிய நடைமுறை உதவும்.இணையதளம் மூலமாக சான்றிதழ் வழங்குவது குறித்து தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நேரடி கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த சேவையை பயன்படுத்தி, இணையம் வழியாக விண்ணப்பித்து குடியிருப்பு, குடியுரிமை, சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை, வரும் ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here