அதிருப்தியில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சமரசம்…

0
801

காங்கிரசிலிருந்து விலகிய ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் என்ற இயக்க்ததை தொடங்கி கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் பலத்தோடு ஆட்சியை கைப்பற்றினார். என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களாக லாஸ்பேட்டை தொகுதியில் வைத்தியநாதன், காலாப்பட்டு தொகுதியில் கல்யாணசுந்தரம், ஊசுடு தொகுதியல் கார்த்திகேயன் ஆகியோரும் வெற்றி பெற்றிருந்தனர். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்த நாள் முதலே மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு குழுவாக செயல்பட்டு வந்தனர். அதன்பின்பு 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் முதல்அமைச்சர் ரங்கசாமியுடன் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக இந்த மூன்று சட்டமன்ற ஊறுப்பினர்களும் விலகி தனிக் குழுவாக செயல்பட துவங்கினார்கள்.
இதற்குபிறகு கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக இந்த மூன்று பேருக்கும் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இதனால், மூன்று பேரும் தங்களது தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கினார்கள். இதில், கடைசி நேரத்தில் ஊசுடு தொ-குதி கார்த்திகேயன் காங்கிரஸ் வேட்பாளர் தீப்பாய்ந்தான் அவர்களிடம் “சரண்” அடைந்துவிட்டதாகவும் பேசப்பட்டது. இதனால், ஊசுடு தொகுதியில் இவர் எதிர்பார்த்த அளவு வாக்குகள் இவருக்கு கிடைக்கவில்லை. ஆனால், லாஸ்பேட்டை மற்றும்¢ காலாப்பட்டு தொகுதிகளில் சுயேட்சையாக களம் இறங்கிய வைத்தியநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் இரண்டாவது இடத்திற்கு வந்தனர். இந்த தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இதற்கு பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘ஊசுடு தொகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமியைச் சந்தித்து மீண்டும் என்.ஆர்.காங்கிரசில் ஐக்கியமானார்.
இருந்தாலும் மற்ற இரண்டு பேரும் எந்த கட்சியிலும் இணையாமல்¢ சுயேட்சையாகவே செயல்பட்டு அவர்களது தொகுதிகளில் மக்கள் பணி செய்த வந்தார்கள். இந்த தற்போது நடைபெற உள்ள 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், பாராளுன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி அதிருப்தியாளர்களை சந்தித்து சமசரம் செய்து வருகிறார். இதற்காக லாஸ்பேட்டை தொ-குதி வைத்தியநாதன் மற்றும் காலாப்பட்டு தொகுதி கல்யாணசுந்தரத்தின் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்தித்து சமாதானப்படுத்தினார். பின்பு, இருவரும் சமாதானம் அடைந்து என்.ஆர்.காங்கிரசில் இணைந்து பாராளுமன்ற தேர்தல் பணியாற்ற ஒப்புக் கொண்டாக தெரிகிறது. அதிருப்தியில் இருந்து முன்னாள் எம்எல்ஏக்கள் மூன்று பேரும் என்.ஆர்.காங்கிரசில் ஐக்கியமாகி விட்டதால் அந்தந்த தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here