புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் – மும்முனைப் போட்டி

0
963

பாராளுமன்ற தேர்தலோடு புதுவையில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி மறுசீரமைப்பில் 3 தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.
கதிர்காமம், இந்திரா நகர் மற்றும் தட்டாஞ்சாவடி என 3 ஆக பிரிக்கப்பட்டது. இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மீண்டும் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிட்டு 2-வது முறை எம்.எல்.ஏ. ஆனார். இந்த நிலையில் அவர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அசோக் ஆனந்தின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. மேலும், தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாகவும், சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்தார். இந்த அறிவிப்பு முறைப்படி தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலோடு தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு செய்யும் அதே நாளில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடும் என முதல் -அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
இதன்படி தி.மு.க. வேட்பாளர் களம் இறங்க உள்ளது. தி.மு.க.வை எதிர்த்து என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார். இதற்கான வேட்பாளர் தேர்வு 2 கட்சியிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக. சார்பில் கலாம் சேவை மையம் வழக்கறிஞர் சம்பத்¢ போட்டியிடுவார் என்று தெரிகிறது.
என்.ஆர்.காங். சார்பில் தொழிலதிபர் புவனா (எ) புவனேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்தின் உறவினர்களோ களம் காணும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக போட்டியிடுவதை திமுக&காங். கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்பாததால், தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டிடுவதற்கான ஆயத்த பணிகளை மேற் கொண்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டப்படி தேர்தலில் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:-
அசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்கிரஸ்) – 12,754
சேது செல்வம் (இந்திய கம்யூனிஸ்டு) – 5,296
7 ஆயிரத்து 458 வாக்கு வித்தியாசத்தில் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார்
29 ஆயிரத்து 317 வாக்காளர்கள் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில் 27 வாக்குச் சாவடிகள் அமைத்து தேர்தல் நடத்தப்படும் என்று புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுந்தவேலு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here