இந்திய இராணுவ பலம் பொருந்தியது – பாஜக சாமிநாதன்

0
410

பாஜக மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோழைத்தனமாக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் இந்திய இராணுவத்தின் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 44 இந்திய ராணுவ வீரர்களை நம் நாடு இழந்துள்ளது. இந்த துயரம் மேலும் நிகழாத வண்ணம் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் துணிச்சலான நடவடிக்கையால் இன்றைய தினம், இந்திய இராணுவத்தினரால் விமானப்படை மூலம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அவை அழிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய இராணுவ பலம் பொருந்தியது என மீண்டும் நிரூபிக்கப்பட்டது. இந்த தாக்குதலை மேற்கொண்ட அனைத்து இராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் புதுச்சேரி மாநில மக்கள் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சியில் பதவி மற்றும் கட்சியை விட மேலானது தேசமே என்பதை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நிரூபித்துள்ளார். தொடர்ந்து நடக்கவிருக்கும் இராணுவ நடவடிக்கைகளில் இராணுவ வீரர்களுக்கும், பிரதமருக்கும் இந்திய மக்கள் உறுதுணையாக இருப்பார்கள். மேலும், பாகிஸ்தானுக்கும் இது ஒரு கடும் எச்சரிகை. மீண்டும் மீண்டும் காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாகிஸ்தான் கடும் விளைவுகள் சந்திக்கும் என்பதை பாகிஸ்தான் அதிபர் உணர வேண்டும். தற்கொலை படையால் தாக்குதலால் வீர மரணம் அடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த தாக்குதலை நாம் காணிக்கையாக்குவோம் என்று அந்த கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here