கனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை

0
664

புதுச்சேரியில் புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமியுடன் -கனடா நாட்டு தொழில் வர்த்தக சபையினர் ஆலோசனை நடத்தினார்கள். புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் பொருட்டு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே புதுச்சேரியில் பசுமை தொழிற்சாலைகளை தொடங்குவது தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர்களுடன் கடந்த மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதன்மூலம் ஏராளமான தொழில் முனைவோர் புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு முன் வந்துள்ளனர். இந்நிலையில் கனடா நாட்டை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவது தொடர்பாக, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களை கனடா நாட்டின் தூதரக அலுவர்கள் தலைமையில் இந்தோ – கனடா தொழில் வர்த்தக சபையினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள புதிய தொழில் கொள்கையின்படி புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளையும் மாநில அரசு துரிதமாக செய்துகொடுக்குமென முதலமைச்சர் அவர்கள் தொழில் வர்த்தகர்களிடன் உறுதி அளித்தார்கள். இந்த சந்திப்பின்போது மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் ஷாஜகான் அவர்களும் உடனிருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here