விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

0
283

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி, ராம்பாக்கம் ஊராட்சி-க்கு உட்பட்ட அரசினர் மேல்நிலைப் பள்ளி, வானூர் தொகுதி பக்கிரி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ராமதாஸ், கண்டமங்கலம் முன்னாள் தலைவர் தமிழ்மணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருநாவுக்கரசு மற்றும் தலைமை ஆசிரியர் குணசேரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காசிநாதன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 904 மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here