ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது

0
439

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 12 மாத ஊதியமாற்றம் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட 9 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தொடர்ந்து மூன்றாம் நாளான இன்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here