நெட்டபாக்கத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0
562

நெட்டப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. விஜயவேணி வெங்கடேசன் அவர்களின் கார் ஓட்டுனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி கார் கண்ணாடிகளை உடைத்து சட்டமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகளை கைது செய்ய காலம் கடத்தி வரும் காவல்துறையை கண்டித்து முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சக்திவேல் மற்றும் தற்போதைய தலைவர் பிசிசி பிரகாஷ் ஆகியோர்கள் தலைமையில் கரையாம்புத்தூர் பேருந்து நிலையம் அருகில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொகுதி பொதுச்செயலாளர்கள் பழனிவேல், சுகுமார், வினோத், ஸ்ரீராம், ஸ்ரீதர், அப்பு மற்றும் மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் வேல்முருகன், காளிமுத்து, பொதுச்செயலாளர்கள் பரணிதரன், ஜோசப் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரும், மாநில செயலாளருமான உதயகுமார் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் மற்றும் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here