இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் – பாஜக தலைவர் சாமிநாதன்

0
507

பாஜகவின் புதுச்சேரி மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி.

தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாக திகழ்கிறது. தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை உலக நாடுகள் எல்லாம் போற்றுவதற்கு மிக முக்கிய காரணமாக திகழும் தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முதன்மையாகத் திகழும் பொங்கல் திருநாள் எனும் இந்த அறுவடைத்திருநாளை நம் தமிழினம் மட்டுமின்றி நமது பாரதத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுமே நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளை வாழ வைக்கும் சூரியன், காற்று, தண்ணீர் உள்ளிட்ட இயற்கையை வணங்கும் திருநாளாகவும், உழவர்கள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் மஞ்சள், கரும்பு, இதர உணவுத் தானியங்களை வைத்து வணங்கும் உழவர் திருநாள் மற்றும் மாட்டுப் பொங்கல் திருநாளாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்று கூடி உறவை வளர்க்கும் காணும் பொங்கல் பண்டிகையாகவும் மக்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியோடு கொண்டாடும் இவ்வேளையில், சாதி மற்றும் மதங்களை கடந்து நமது பாரத மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில்¢ அனைத்து சலுகைகளையும், அனைத்து உரிமைகளையும் பெற்று புதிய பாரதம் படைத்திட வேண்டுமென அயராது உழைத்துக் கொண்டிருக்கும் நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடியின் மக்கள் நலத்திட்டங்கள் யாவும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைத்திட வேண்டுமென எல்லா வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ மொழி மற்றம் தமிழர் கலாச்சாரத்தை மென்மேலும் மேம்படுத்திட வேண்டும். தை பிறந்த நாள் வழி பிறக்கும் என்ற கூற்றிற்கு இணங்க இந்த தை திருநாள் புதுச்சேரி மக்களின் இருளை நீக்கிஒளிமயமான வாழ்வை அளிக்கட்டும்.

புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here