தொடரும் அவலங்கள் இலாஸ்பேட்டை தொகுதி பெத்துச்செட்டிப்பேட்டை மற்றும் வள்ளலார் நகரில்…

0
490

இலாஸ்பேட்டை தொகுதி பெத்துச்செட்டிப்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் வீதி மற்றும் வள்ளலார் நகரில் உள்ள முதல் குறுக்குத் தெரு, வள்ளலார் நகரில் இருந்து ஆனந்தா நகர் போகும் சாலையில் உள்ள மின்கம்பத்தில் உள்ள மின் விளக்குகள் கடந்த 2 மாதத்திற்கு மேலாக எரியாமல் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் பெரும் சிரம்மத்திற்கு ஆளாகிறார்கள். இதுசம்மந்தாக மின் துறைக்கு போன் மூலமாகவும், நேரிடையாக சென்றும் புகார் தெரிவித்தும் எந்தவிதமான பலனும் இல்லை. இந்தப் பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று லாஸ்பேட்டை காலேஜ் ரோடு மற்றும் இதயா காலேஜ் அருகில் உள்ள மின் துறை அலுவலகங்கள் கூறி வருகிறார்கள்.

ஏழை மக்கள் மின் கட்டணம் கட்டவில்லை என்றால் மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் மின் துறை அந்த ஏழை மக்கள் செல்லும் சாலைகளில் உள்ள மின் கம்பத்தில் மின் விளக்கு எரியவில்லை என்றால், புகார் தெரிவித்தும் நமக்கு என்ன? என்ற அலட்சியமாக இருப்பது என்று புரியவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் புலம்பி வருகிறார்கள். மின் விளக்கு எரியாததால் அப்பகுதியில் இரவு நேரங்களில் பல முறைகள் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், “காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள் இந்த பகுதியில் வசித்தும் இது குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும், ஆலய திருவிழாவில் மட்டும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் புகைப்படம் பொறித்த பனியனை போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் இருந்தவர்கள், கடந்த 2 மாதத்திற்கு மேலாக மின் கம்பத்தில் மின் விளக்குகள் எரியாததை அவர்கள் பார்த்துக் கொண்டு ஏன் அமைதியாக இருக்கிறார்கள்” மேலும், கூறுகையில், “காங்கிரஸ சட்டமன்ற உறுப்பினர் ஆலய அறங்காவல் குழுவில் தங்களுடைய ஆதரவாளர்கள் நியமிப்பதில் காட்டுகின்ற ஆர்வத்தை, இப்பகுதியில் உள்ள மக்களிடம் காட்டவில்லை என்றும், அவ்வாறு காட்டியிருந்தால், அவருடைய ஆதரவாளர்கள் இந்த பகுதியில் வசித்தும், ஏன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நியமித்த ஆலய அறங்காவல் குழு பலமுறை இந்த தெரு வழியாக பலமுறை சென்று வருகிறார்கள். இந்தளவிற்கு இருந்தும் மின் கம்பத்தில் உள்ள மின் விளக்குகளை சரி செய்வதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது” ஏன் என்று புரியவில்லை என்று கவலையோடு கூறிவருகிறார்கள்.

ஏதேனும் பெரிய விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தில் உள்ள எரியாத மின் விளக்குகள் சரி செய்யப்படுமா? என்று அப்பகுதி கவலையோடு இரவு நேரங்களில் இந்த மின் கம்பங்களை பார்த்து வருகிறார்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here