நாராயணசாமியின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் – பாஜக மாவட்டத் தலைவர் சிவானந்தம்

0
607

புதுச்சேரி பாஜக உழவர்கரை மாவட்டத் தலைவர் சிவானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என இப்போது அக்கறை காட்டும் காங்கிரஸ் கட்சிதான் கடந்த 50 ஆண்டு காலமாக புதுவையை ஆண்டது. அப்போதெல்லாம் மாநில அந்தஸ்து கோரவில்லை, டெல்லி சென்று போராடவில்லை. கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி தலைமையில் ஜனாதிபதியை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வாய்ப்பில்லை என திருவாய் மலர்ந்தார். அதே நாராயணசாமிதான் இப்போது மாநில அந்தஸ்து கேட்டு போராட்டம் நடத்துகிறார். கூட்டணி கட்சியினருக்கு எதுவுமே செய்யாத அவர் தற்போது டெல்லிக்காவது அழைத்து செல்கிறாரே என அனைத்து கட்சியினரும் போராட்டம் என்ற பெயரில் டெல்லிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் நாராயணசாமியின் நாடகத்தை புரிந்து கொள்வார்கள். மாநில அந்தஸ்து கிடைக்காது என்பது தெரிந்தே பாராளுமன்ற தேர்தலுக்காக அவர் நாடகம் ஆடுகிறார். தன் ஆட்சியில் தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங்களை கவர்னர் கிரண்பேடி செய்கிறார் என்ற காரணத்தால் அவரை மாற்ற வேண்டும் என துடிக்கிறார். ஆட்சியில் நடக்கும் தவறுகளை கவர்னர் கிரண்பேடி தட்டி கேட்கிறார் என்பதால் அவரை மாற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறார். மொத்தத்தில் புதுவை மக்கள் முதல்வர் நாராயணசாமியையும் அவர் ஆடும் நாடகங்களையும் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் அவருக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் பதில் சொல்வார்கள் என்பது நிச்சயம். என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here