உழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்

0
661

உழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் உழவர்கரை மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமையில், தாட்டஞ்சாவடி தொகுதி தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் சுப்புராஜ், கமலநாதன் முன்னிலையில் தட்டாஞ்சாவடி பாரத ஸ்டேட் வங்கி கிளை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பணம் படைத்தவர்கள் மட்டுமே மேலும் மேலும் தொழில் செய்து செழிக்க வங்கிகள் கடன் கொடுத்து வந்த நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தொழில் செய்து வாழ்வில் வளம் பெற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள் முத்ரா கடன் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெற்று சுபிட்சமான வாழ்வை பெற்று வருகின்றனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கெடுக்கும் வகையிலும், நரேந்திர மோடியின்  அவர்களின் தலைமையிலான அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாகவும், புதுச்சேரி பாரத ஸ்டேட் வங்கியின் தட்டாஞ்சாவடி கிளை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த வங்கி கிளையில் முத்ரா கடன் கேட்டு செல்லும் ஏழை மக்களுக்கு கடன் கொடுக்காமல் அலை கழித்து வருகின்றனர். முத்ரா கடனுக்கான விண்ணப்பத்தை கொடுப்பவர்களிடம் இல்லாத காரணங்களை கூறி முத்ரா கடன் கொடுக்க வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்து வகையில் செயல்படும் வங்கி ஊழியர்களுக்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தட்டாஞ்சாவடி பாரத ஸ்டேட் வங்கி கிளைய உழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர்கள் நரசிம்மன், உஷா, முருகன், முத்து, அருள்முருகன், சந்துரு, ஜான், ஜெயக்குமார், பிரகாஷ், குமார், சிவானந்தம், அன்பழகன், கருணாநிதி,  மாநில துணைத் தலைவர் சோமசுந்தரம், மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநில செயலாளர்கள் முருகன், ஜெயந்தி, ஆஜீவன் அணி செயலாளர் உமாபதி, ஓபிசி அணி பொதுச் செயலாளர் அகிலன், வர்த்தக பிரிவு சோழராஜன், இந்திரன், சுமதி, மாநில மகளிரணி பொருளாளர் கனகவள்ளி, மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாநில பொதுக் குழு உறுப்பினர் ரமணி, மாநில விவசாய அணி செயலாளர் கோவிந்தசாமி, மாநில மகளிரணி செயலாளர் லதா உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது பேராட்டம் குறித்து வங்கி மேலதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இதுவரை நடைபெற்ற தவறுகள் இனிமேல் நடக்காது என்றும், முத்ரா கடன்  விண்ணப்பம் கொடுத்தவுடன் குறைந்த 1 மாதத்திற்குள் கடன் வழங்கப்படும் என்று வங்கி மேலதிகாரிகள் கூறியதால், பாஜக நிர்வாகிகள் அனைவரும் போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here