2019-ல் புதுச்சேரியை வளம் பொருந்திய மாநிலமாக மாற்றுவோம் – முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை

0
474

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். இந்த ஆண்டு புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்திருந்தனர். கூடுதல் வரி விதிக்கப்பட்டிருந்ததால் ஓட்டல்களில் சிறப்பு புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி கடற்கரைக்கு இரவு 7 மணி முதல் படையெடுத்து வந்தனர். பஸ் நிலையத்திலிருந்து பல சுற்றுலா பயணிகள் நடந்தே கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

இரவு 9 மணி முதல் புத்தாண்டு வரவேற்புகளை கட்ட தொடங்கியுள்ளது. கடற்கரையில் நடந்த இசை நிகழ்ச்சியோடு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக இருந்தனர். இரவு 11.30 மணியளவில் முதல்வர் நாராயணசாமி திடீரென டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார். பின்னர் போலீசாருடன் கடற்கரை சாலை காந்தி திடலுக்கு முதல்வர் நாராயணசாமி வந்தார். அங்கு பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

முதல்வர் நாராயணசாமி மைக்கை பிடித்து புதுச்சேரி மாநில மக்களுக்கும், புதுச்சேரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும் புத்தாண்டை கொண்டாடி விட்டு பாதுகாப்பாக தங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து 12 மணிக்கு வாணவேடிக்கையுடன் புத்தாண்டை சுற்றுலா பயணிகள் வரவேற்றனர். முதல்வர் நாராயணசாமி இதைத்தொடர்ந்து தனது தொகுதியான நெல்லித் தோப்புக்கு சென்றார். அங்கு விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நடந்த புத்தாண்டு சிறப்பு கூட்டு பிரார்த்தனை, திருப்பலியில் பங்கேற்றார். அங்கிருந்த கிறிஸ்தவ மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் ஜென்மராக்கினி மாதா ஆலயத்திலும் நடந்த கூட்டு பிரார்த்தனை, திருப்பலியில் பங்கேற்று அங்கிருந்த வர்களுக்கு முதல்வர் நாராயணசாமி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலுக்கு முதல்வர் நாராயணசாமி சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர் களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

2019 புதிய ஆண்டில் புதுச்சேரி மாநில மக்கள் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும். எல்லா வளமும் பெற மணக்குள விநாயகர் ஆசீர்வாதம் தர வேண்டும் என வேண்டினேன். புதுச்சேரி மாநிலம் ஆன்மீக பூமி, சித்தர் பூமி, அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் பூமி. புதுச்சேரியில் 2 ஆண்டில் கல்வி, சுகா தாரம், சட்டம்&ஒழுங்கு, சுற்றுலா, நிர்வாகத்தில் பல விருதுகளை பெற்றுள்ளது. மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற
பின்னர் ஜென்மராக்கினி மாதா ஆலயத்திலும் நடந்த கூட்டு பிரார்த்தனை, திருப்பலியில் பங்கேற்று அங்கிருந்த வர்களுக்கு முதல்வர் நாராயணசாமி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலுக்கு முதல்வர் நாராயணசாமி சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர் களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

2019 புதிய ஆண்டில் புதுச்சேரி மாநில மக்கள் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும். எல்லா வளமும் பெற மணக்குள விநாயகர் ஆசீர்வாதம் தர வேண்டும் என வேண்டினேன். புதுச்சேரி மாநிலம் ஆன்மீக பூமி, சித்தர் பூமி, அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் பூமி. புதுச்சேரியில் 2 ஆண்டில் கல்வி, சுகாதாரம், சட்டம்&ஒழுங்கு, சுற்றுலா, நிர்வாகத்தில் பல விருதுகளை பெற்றுள்ளது. மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற முனைப்புடன் இருந்தாலும் சில முட்டுக்கட்டைகள் இடையூறாக இருந்து வருகிறது. 2019&ல் முற்றுப்புள்ளி வரும். புதுச்சேரி மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.

மத்திய நிதி கிடைக்காவிட்டாலும் மாநில வருவாயை பெருக்கி மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி கடந்த கால கடன்களை அடைத்து வருகிறோம். 2019&ம் ஆண்டில் புதுச்சேரியை வளம் பொருந்திய மாநிலமாக மாற்ற வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தாழ்த்தப்பட்டோர் என அனைத்துதரப்பினரும் பயன்பெறும் வகையில் திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்து வருகிறோம். இதில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மத்தியில் மிகப்பெரும் மாற்றம் வரும். அதன்மூலம் புதுச்சேரிக்கு நல்ல பலன் கிடைக்கும். 2019&ம் ஆண்டில் புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வளத்தோடு, அனைத்து வசதிகளும் பெற்று வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here