சேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
488

சேதுராப்பட்டு EATON கம்பெனி நிர்வாகத்தின் சார்பாக ஜிப்மர் ஆடிடோரியத்தில் ஆண்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

நிர்வாகம் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட சங்க நிர்வாகிகள் பாஸ்கர், ரமேஷ் இருவரையும் உடன் வேலைக்கு அனுமதிக்க வேண்டும், சட்டவிரோத ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், புதுச்சேரி அரசும், தொழிலாளர் துறையும் உடன் தலையிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்  சுப்பையா திருமண மண்டபம் அருகிலிருந்து ஊர்வலமாக சென்று ஜிப்மர் ஆடிடோரியத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு AICCTU தலைவர் மோதிலால் தலைமை தாங்கினார்.நாம் தமிழர் தொழிற்சங்க தலைவர் த.ரமேஷ், AIUTUC மாநில தலைவர் சி.சிவக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் சீதரன் மற்றும் ஸ்ரீதர்  ஜனநாயக தொழிலாளர் சங்க நிர்வாகி பாஸ்கர், EATON சங்க நிர்வாகிகள் பாஸ்கர், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை    டி.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலையரசன் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here