முத்ரா வங்கி கடன் திட்டம் முடிந்து விட்டது – சொல்கிறார் லாஸ்பேட்டை இந்தியன் வங்கி மேலாளர்

0
650

குஜராத் முதல்வராக பதவி வகித்து வந்த மோடி, கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றவுடன் நரேந்திரமோடி பாரதப் பிரதமராக பதவி ஏற்றார். தான் பதவி ஏற்றவுடன் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையிலும், வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்பவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை கந்துவட்டியில் இருந்து பாதுகாத்திடவும், முத்ரா வங்கி கடன் திட்டத்தை கொண்டு வந்தார். குறைந்த பட்ச கடன் தொகைக்கு எந்தவிதமான சொத்து ஜாமீன் கொடுக்காமல் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

இதனை அறிவித்த முதலே சில வங்கிகளில் சரிவர செயல்படுத்தாமல் இருந்து வந்தன. பின்பு அனைவருக்கும் முத்ரா வங்கி கடன் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த முத்ரா வங்கி தற்போது மீண்டும் சரிவர கொடுக்காமல் கடன் கேட்டு வங்கிக்கு வரும் மக்களை அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது, புதுச்சேரி இலாஸ் பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் முத்ரா வங்கி கடன் கேட்டு யாராவது போனால், முத்ரா வங்கி கடன் முடிந்து விட்டது என்று கூறி அனுப்பிவிடுகிறார். அதையும் மீறி யாராவது போனால், மேலாளர் மனுவை வாங்காமலே என்ன தொழில் செய்யப்போகிறாய், இந்த தொழிலுக்கு இந்த பொருள் தேவைப்படாது என்று அவராகவே ஒரு முடிவெடுத்து கடன் கேட்டு வருபவர்களை அனுப்பிவிடுகிறார். கடன் கேட்பவர்கள் என்னதான் சொன்னாலும் அதனை மேலாளர் கேட்காமலே கடன் கேட்டு வருபவர்களை திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்.

வங்கிக்கு வருபவர்கள் இதனை பார்த்து என்ன தொழிலுக்கு என்ன மூலதனம் தேவை என்பது தெரியாதவர் வங்கி மேலாளராக இருப்பதாக புலம்பியவாரே செல்கிறா£ர்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here