என்றும் மக்கள் சேவையில் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன்

0
302

கடந்த 2016ம் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு இரண்டாவது இடத்தில் வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் அவர்கள் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகும் எந்த கட்சியையும் சாராமல் சுயேட்சையாக மக்கள் பணியை விடாமல் தன்னுடைய கமலா அறக்கட்டளை மூலம் லாஸ்பேட்டை தொகுதி மக்களுக்கு தனது சேவைகளை செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தாம் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று லாஸ்பேட்டை தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் தனது ஆதரவாளர்களை கேட்டு வருகிறார்.

கமலா அறக்கட்டளையின் சார்பில் இலாசுப்பேட்டை தொகுதிக் குட்பட்ட நெசவாளர் நகர், ஆனந்தா நகர், நந்தா நகர், பெத்துசெட்டிப்பேட்டை, வள்ளலார் நகர், மஹாவீர் நகர் ஆகிய பகுதிகளுக்கான எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் பெத்துசெட்டிப்பேட்டை திருமுருகன் திருமண நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மனோகர் வரவேற்புரை வழங்கினார். கமலா அறக்கட்டளையின் முதன்மை செயலர் திருமதி. ரமாவைத்தியநதன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கமலா அறக்கட்டளையின் நிறுவனருமான வைத்தியநாதன் லாஸ்பேட்டை தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசும் போது,

இலாசுப்பேட்டை தொகுதியில் சாலைகள் அனைத்தும் பழுதடைந்து கரடுமுரடாக உள்ளதால் மக்கள் பெரிதும் அவதிபட்டு வருகிறார்கள். லாஸ்பேட்டை தொகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மேலும், சாலையில் உள்ள மின் விளக்குகள் பெரும்பாலனவை எரியாத மின் விளக்குகளாக உள்ளன. தண்ணீர் வரவில்லை என்றால் பெண்கள் உடனடியாக என்னுடைய வீடு தேடி வந்து சொல்வார்கள். உடனடியாக அதனை சரிசெய்து இருக்கின்றேன். ஆனால், தற்பொழுது அந்த நிலையில்லை தொகுதியில் தற்பொழுது உள்ள சட்டமன்ற உறுப்பினர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. மக்கள் படும் துன்பங்களை அவர் உணரவில்லை. இதுவே நமது ஆட்சிக்காலமாக இருந்தால் சாலை வசதியாக இருந்தாலும் சரி, மின்சார வசதியாக இருந்தாலும் சரி நாம் அதனை உடனுக்குடன் சரி செய்தோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது தொகுதிக்கு நன்மை செய்யக்கூடிய வேட்பாளரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீசிவசுப்ரமணியர் சுவமி தேவஸ்தான முன்னாள் அறங்காவல் குழு தலைவர் மணி(எ)சுந்தரராஜன், மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜனார்த்தனன், ஆசிரியர் தயாநிதி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் தனது கருத்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோ.செழியன் தொகுத்து வழங்கினார்.

கூட்டத்தின் முடிவில் இராமநாதசுவாமி நன்றியுரை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here