கமலா அறக்கட்டளையின் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம்

0
647

இலாசுப்பேட்டை தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிநகர் பகுதியில் கமலா அறக்கட்டளையின் சார்பாக எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கமலா அறக்கட்டளையின் பொறுப்பாளர் செழியன் வரவேற்புரையாற்றினார், கமலா அறக்கட்டளையின் முதன்மை செயலர் திருமதி.ரமாவைத்தியநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார். கமலா அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வைத்தியநாதன் அவர்கள் தலைமை வகித்து பேசும் பொழுது சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர் நமது தொகுதிக்காக நமது வேண்டுகோளுக்கிணங்க நாம் தேர்வு செய்த இடத்தில் ரூ.50 இலட்சம் செலவில் தார்ச்சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்க நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியினை அளித்தார்.. அதுபோல வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் நமது தொகுதிக்கும்,  மக்களுக்கும் நன்மையை செய்யும், நம் கோரிக்கைகளை ஏற்கும் வேட்பாளரையே ஆதரிப்போம். மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க விரும்பும் கட்சி அதற்கான தொகுதிகளில் தகுதியான திறமையான வேட்பாளரையே தேர்வு செய்யும், அப்படி பார்க்க இலாசுப்பேட்டை தொகுதியில்  அந்த தகுதியான இடத்தில் நாம் தான் உள்ளோம். என இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் என உரையாற்றினார்.

இறுதியாக   மனோகர் அவர்கள் நன்றியுரை வழங்கினார், இணைப்புரையை   பிரபு மற்றும் பாஸ்கர் ஆகியோர் வழங்கினார்கள். மேலும்   ஜனார்த்தனன் மற்றும் குறிஞ்சி நகர் ஊர் பெரியவர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குறிஞ்சி நகர், ராமன் நகர், குறிஞ்சி நகர் விரிவு ஆகிய பகுதிகளை சார்ந்த இளைஞர்கள் செய்திருந்தனர். இக்கூட்டத்தில் ஊர்பெரியவர்கள்,  ஆதரவாளர்கள், இளைஞர்கள்,  மகளிர்குழுக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here