மீண்டும் வருவேன்… வதந்திகளை நம்ப வேண்டாம்…- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் ஆவேசம்

0
738

இலாசுப்பேட்டை தொகுதி யின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முதல்வரின் பாராளுமன்ற செயலராகவும் செயல்பட்டு வந்த வைத்திய நாதன் அவர்கள் 2016-&ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி இரண்டாம் இடம் பிடித்து தன் தனிப்பட்ட செல்வாக்கை உணர்த்தி, மேலும் தனது கமலா அறக்கட்டளை மூலம் தனது மக்கள் சேவையை தொடர்ந்து நடத்தி மக்களோடு மக்களாக பயணித்தும், தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டு கமலா அறக்கட்டளை எனும் சேவை நிறுவனத்தை 8- ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் எனது ஆதரவாளர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்கும் முதல் புள்ளியாய் இலாசுப் பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜீவானந்தபுரம் பகுதியில் கமலா அறக்கட்டளை சார்பாக ஆலோசனைக்கு கூட்டம் வைத்தியநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் அவர்கள் பேசியதாவது,

கமலா அறக்கட்டளையின் சேவைப் பணிகள் தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறேன். ஏழை மக்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளுக்கு சாமியானா, நாற்காலி, மேசை, இறப்பு நிகழ்ச்சிகளுக்கு குளிர் பதனப் பெட்டி போன்றவைகளை இலவவமாக அளித்து வருகிறேன். இந்த சேவைகளை பதவியில் இருந்தாலும், பதவியில் இல்லா விட்டாலும் தொடர்ந்து சேவையினை செய்து கொண்டிருக்கிறேன்.

மேலும் கமலா அறக்கட்டளையின் பயிற்சி மையத்தில் ஆண்டு தோறும் 120 பெண்கள் இலவசமாக தையல் பயிற்சியும், 60 மாணவர்கள் தட்டச்சு பயிற்சி இலவசமாக முடித்து வெளிவந்து கொண்டிருக் கிறார்கள்.

மேலும் என்னால் முடிந்த அளவிற்கு எனது சொந்த பணத்தில் இருந்து நற் சேவைகள் செய்து வருகிறேன்.நான் தேர்தலுக்காக மக்களை சந்திப்பவன் அல்ல என்பது மக்களுக்கு தெரியும். நான் எப்பொழுதுமே மக்களை நம்பித்தான் இருக்கிறேன். சமீப காலமாக தொகுதியில் உள்ள சில விஷமிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை என பொய்யான பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இதனை நீங்கள் நம்ப வேண்டாம். என் கூடவே இருந்து எனக்கு துரோகம் இழைத்த சில புல்லுருவிகளின் பொய் பிரச்சாரங்களை எதிர்காலத்தில் தவிடு பொடியாக்குவேன் என்பதை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிது புதிதாக இன்று தலைவர்கள் உருவாகலாம், அவர்கள் இதுவரை நம் தொகுதியில் உள்ள மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் என்னை எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்க முடியும். ஆனால் இப்பொழுது உள்ளவரை சந்திப்பது என்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

எனவே, எதிர் வருகின்ற தேர்தலில் கண்டிப்பாக மக்களுக்கும், தொகுதிக்கும் நன்மை தரக்கூடிய கட்சியில் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்பதை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கூட்டத்தில் ஊர் பெரியவர்கள், ஆதரவாளர்கள், இளைஞர்கள், மகளிர் குழுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here