காமராஜ் நகரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்… என்.ஆர்.காங்கிரஸ் புவனா…

0
462

புதுவை காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்புவனா என்கிற புவனேஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர்கூறியதாவது:

இந்திய ஜனநாயக முறைப்படி காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவில்லை. காமராஜ் நகர்தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஒரு வருடத்திற்கு இலவச கேபிள் இணைப்பு, ரூ.15 ஆயிரத்திற்கு இலவச பொருட்களுக்கான டோக்கன் வழங்கியது என பலகுற்றங்கள் நடந்துள்ளது.

வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது என ஆதாரத்துடன் தேர்தல் துறையிடம் புகார் செய்தோம். ஆனால் மாநில தேர்தல்துறையும், காவல்துறையும் ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டது. எங்கள் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

பணம் உள்ளவர்கள்தான் அரசியல் வெற்றி பெறுவார்கள் என்ற நிலை மாநில மக்களின் நலனுக்கு உகந்ததல்ல. காமராஜ் நகரில் நடைபெற்ற முறைகேடுகள், தேர்தல் விதி மீறல்கள் குறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here